;
Athirady Tamil News

திருப்பூர் மாவட்ட கோவில்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

0

திருப்பூர் மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. திருப்பூர் டவுன் ஹால் செல்வவிநாயகர் கோவில், குலாலர் பிள்ளையார் கோவில் , செரீப் காலனி சித்தி விநாயகர், ஜான் ஜோதி கார்டன் செல்வவிநாயகர், எஸ்.ஆர்.நகர் நவக்கிரக விநாயகர், கருவம்பாளையம் மேற்கு விநாயகர் கோவில், எஸ்.வி.,காலனி, வலம்புரி ரத்தின விநாயகர், ராயபுரம் ராஜவிநாயகர், மண்ணரை செல்வ விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜைகளில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், அலகுமலை பாலதண்டாயுதபாணி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லடம், தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி வட்டார கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதுதவிர வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.