கல்பாக்கம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது..!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 23-ந்தேதி காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது., தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக 110 மெகா வாட் மின் உற்பத்தியை தொடங்கி படிப்படியாக முழு உற்பத்தி திறனை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.