;
Athirady Tamil News

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி: பகிரங்கமாக அறிவித்த ஐரோப்பிய நாடொன்று

0

உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பும் விளாடிமிர் புடினும் நேரிடையாக சந்திக்கவிருக்கும் நிலையில், உக்ரைன் போரில் ரஷ்யா வென்றுள்ளதாக ஹங்கேரியின் வலதுசாரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நெருக்கம்
கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்துவரும் ஓர்பன், ஹங்கேரி அரசாங்கத்தின் ரஷ்ய நெருக்கம் தொடர்பில் சில ஐரோப்பிய தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓர்பன் அரசாங்கம், கடுமையான பணவீக்கத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க போராடி வருகிறது.

உக்ரைன் போருக்கு முன்பிருந்தே ரஷ்யா உடன் நெருக்கமான உறவை பேணி வரும் ஓர்பன் மட்டுமே உக்ரைன் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் கூட்டு அறிக்கையை ஆதரிக்கவில்லை.

இந்த நிலையிலேயே உக்ரைன் போரில் ரஷ்யா வென்றுள்ளதாக நேர்காணல் ஒன்றில் ஓர்பன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, உந்த உண்மையை உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள் எப்போது ஒப்புக்கொள்ளும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரழிவை ஏற்படுத்தும்
ரஷ்யாவிடமிருந்து தமக்கு தேவையான மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் ஹங்கேரி, உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப மறுத்துவிட்டது. மட்டுமின்றி உக்ரைனின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பதவியை ஓர்பன் கடுமையாக எதிர்த்து வருவதுடன்,00lplA

அது ஹங்கேரிய விவசாயிகளுக்கும் பரந்த பொருளாதாரத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் விளக்கமளித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ஜோ பைடன் ஆட்சியின் போதே புடினுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை ஐரோப்பா தவற விட்டதாகவும்,

தற்போது ஐரோப்பாவின் பங்களிப்பு இல்லாமல் உக்ரைன் எதிர்காலம் முடிவு செய்யப்படும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.