;
Athirady Tamil News

நுவரெலியாவில் இடியுடன் கூடிய கடும் மழை

0

நுவரெலியா நகரை அண்மித்த பகுதிகளில் இன்று (14) மதியம் இடியுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணி முதல் கடுமையான மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதுடன், சில ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடும் மழையுடன் பனிமூட்டமும் நிலவுவதால், வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு மெதுவாகப் பயணித்ததுடன், சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நகரப் பகுதிகளில் முறையற்ற கால்வாய் அமைப்புகள் மற்றும் மதில்கள் காரணமாக மழைநீர் முறையாக வடிந்தோட முடியாமல் பல வீதிகளில் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்களின் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டதுடன், தொடர்ந்து பெய்துவரும் மழையால் கடும் குளிருடனான காலநிலையும் நிலவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.