;
Athirady Tamil News

பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ; உளவுத்துறைத் தகவல்

0

பிரித்தானியாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ரஷ்யாவும் ஈரானும் அதிகரித்து வருவதாக, பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் கென் மெக்கலம் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இடம்பெற்ற வருடாந்த உரையின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ரஷ்யா தொடர்ந்தும் ஆக்கிரமிப்புப் போக்குடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கென் மெக்கலம், பிரித்தானியாவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் ரஷ்யா முன்னெடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளைக் இலக்காகக் கொண்டு ரஷ்யா தனது கலப்புப் போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையவழித் தாக்குதல்கள், தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் பிற மறைமுக நடவடிக்கைகள் ஆகியவை இத்தகைய அச்சுறுத்தல்களில் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகளை ஈரான் தீவிரப்படுத்தி வருவதாகவும் கென் மெக்கலம் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் ஈரானின் நடவடிக்கைகள் பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அதிகரித்து வரும் சவால்களாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்குப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.