சரண குணவர்தன நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 11ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் மற்றொரு இலஞ்ச வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரண குணவர்தன தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.