;
Athirady Tamil News

திருக்கோணேஸ்வர பரிபாலன சபைத் தலைவருடன் புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பீற்றர் கலந்துரையாடல் (படங்கள்)

0

திருக்கோணேஸ்வர பரிபாலன சபைத் தலைவருடன் புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பீற்றர் கலந்துரையாடல் (படங்கள்)

இன்று காலை 11.30 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணஸ்வர ஆலய பரிபாலன சபைக் காரியாலயத்தில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு. தி. துஷ்யந்தன், புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்) ஆகியோர்க்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

தற்பொழுது ஆலயம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளான, தொல்பொருள் தினைக்களத்தினால் ஆராய்ச்சி என்ற பெயரில் பேரினவாதச் சிந்தனையுடன் செயல்படுகின்றமை, கோயில் நடைபாதையில் கடந்த காலங்களில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி பொருத்தமான இடத்தில் அமைப்பது, கலை கலாச்சார சமய பண்பாடுகளுக்கு அமைவாக இவ் ஆலயத்தின் கீர்த்தியை மேலும் மேன்புறச் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும், தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றாக இணைந்து தலத்துக்கு வருகை தந்து பிரச்சினைகளை ஆராய்ந்து கொழும்புக்கு அழுத்தங்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள சைவ மக்களிடமும் சைவ மத அமைப்புகளிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

§§§§§§§§§§§§§§§§§§§§

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்-

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்துடன் தொடர்புபட்ட வகையில் நடைபெறுகின்ற தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றியும், அது தொடர்பில் ஆலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், அந்தணர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆலயத்துடன் தொடர்புபட்ட உறுப்பினர்கள், ஊடகத்தினர், பொதுமக்கள் ஆகியோர்க்கான தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் தி.துஸ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகழ்வாராய்ச்சி இடத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டிருக்கும் கடைகள் பற்றியும், அவற்றை அகற்றி வேறு ஒரு பொருத்தமான இடத்தில் அவற்றை அமைக்க வழிசெய்தல் குறித்தும், ஆலய மணிமண்டபம், இராஜகோபுரம் ஆகியவை அமைப்பதற்கான தடைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் உரையாற்றிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் ஆ. சிறீஸ்கந்தராஜா (பீற்றர்), எமது கட்சி இந்நடவடிக்கைகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்குமென்று குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் புளொட்டின் அரசியல் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் மதியழகனும் கலந்து கொண்டிருந்தார். ஏனைய அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.