;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ; மறுக்கும் சீனா, ரஷ்யா

0

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தில், “மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதலையும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடி கடல்சார் வர்த்தகத்தில் தலையிடுவதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா உள்பட 135 நாடுகள் ஆதரவளித்ததை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளையில், சீனா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. ரஷ்யாவும் தீர்மானத்தை விமர்சித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.