;
Athirady Tamil News

கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்: மத்திய பாதுகாப்பு மந்திரி..!!

0

மும்பையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் மூலம், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் தயாராகி வருகிறது. தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைப் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா இயக்கம் மூலம் உரிய நேரத்தில் ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாட இறக்குமதியைக் குறைக்கும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ராணுவ கப்பல் கட்டும் தளங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் தளங்களாக மாறியிருக்கின்றன. கடந்த 2021-2022ம் ஆண்டு ரூ.8,925 கோடியாக இருந்த கப்பல் கட்டும் தளங்களின் உற்பத்தி , நடப்பு ஆண்டில் ரூ.81,777 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய கப்பல்கட்டும் தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரமான பணிகளை நட்பு நாடுகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.