;
Athirady Tamil News

சிறு தொழில் முயற்சியில் சாதிக்க துடிப்பவர்களா ? BB யுடன் கைகோருங்கள்!! (வீடியோ)

0

கூகிள் வழிகாட்டியில் பதியப்படாத வியாபார நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களை பதிவு செய்யும் ஓர் முயற்சியில் தனது சேவையை Bussiness Board ஆரம்பித்துள்ளது.

Bussiness Board இது ஒரு வியாபார வலைத்தளம் . இதன் மூலம் தங்களது வியாபார நிறுவனத்திற்கு இதுவரை சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம், ருவிற்றர் மற்றும் வலைத்தளம் இல்லாதவர்களுக்கு அவற்றை தயாரித்து வழங்க முன் வந்துள்ளது.

மேலும், சிறுகைத்தொழிலில் சாதிக்க துடிப்பவர்களுக்கு கரம் கொடுத்து அவர்களை வெளியுலகத்தோடு இணைக்கும் ஓர் பாலமாக இந்த BB தனது சேவையை இலவசமாக மேற்கொள்ளவுள்ளது.

தற்போது BB தனது சேவையினை கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுத்துள்ளது.

BB யுடன் இணைப்பதன் மூலம் வடக்கின் வியாபாரங்களை விரிவுபடுத்த உதவுவதோடு அவர்களுக்கான சந்தைப்படுத்தல் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றது .

எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களை நோக்கி நகர்வதற்கு திட்டமிட்டுள்ளதுடன் வியாபாரத்தில் வெளி உலகில் பிரகாசிக்க முடியாதவர்களுடன் BB கைகோர்க்கவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.