;
Athirady Tamil News

கையில் விலங்குடன் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த பரோல் கைதி

0

டாக்கா,

வங்கதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், பரோலில் வெளிவந்து கையில் விலங்கு மற்றும் கயிறு கட்டப்பட்ட நிலையிலேயே தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்துள்ளது.

வங்கதேசத்தின் ஜெனைதா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிப்பன் மல்லிக். வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரது தாயார், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

5 மணி நேரம் மட்டுமே பரோல்

இதையடுத்து, தாயின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பதற்காக ரிப்பன் மல்லிக்கிற்கு சிறை நிர்வாகம் 5 மணி நேரம் மட்டுமே பரோல் வழங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட அவரது கைகளில் விலங்கு மாட்டப்பட்டு, இடுப்பில் கயிறும் கட்டப்பட்டிருந்தது.

கைவிலங்குடன் இறுதிச்சடங்கு

போலீசார் அந்த கயிற்றின் மறுமுனையை பிடித்தபடியே உடன் வர, கைவிலங்குடனேயே தனது தாயின் உடலை தோளில் சுமந்து சென்று ரிப்பன் மல்லிக் இறுதிச்சடங்குகளை செய்தார்.

கண்டனம்

பெற்ற தாயின் இறுதி சடங்கின்போதுகூட கைவிலங்கை அகற்றாமல் கயிற்றால் கட்டி வைத்திருந்த இந்த உருக்கமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.