;
Athirady Tamil News

ஜனவரி 01 முதல் அதிகரிக்கவுள்ள வருமான – வெளியானது அறிவிப்பு!

0

இலங்கையில், வருமானத்திற்கு ஏற்றவாறு வரி பணம் செலுத்துவது தொடர்பான திட்டம், ஜனவரி 01 முதல், நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொருளாதார ஸ்தாபன கலந்துரையாடல் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கபில சேனாநாயக்க மேற்கூறியவாறு தெரிவித்தார்.

மேலும் வருமான வரி நிலுவையின் படி குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தேசிய பிரதம அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது குறித்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இது தொடர்பாக, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மஹிந்த சிறிவர்தன கருத்தை முன்வைத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் அவர்,

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமூக நல கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை.

இதேவேளை ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளார்.

சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம்.”என கூறியுள்ளார்.

இதற்கமைய வருமான வரி நிலுவை படி,

ரூபாய் ஒரு லட்சம் வருமானத்திற்கு எவ்வித வரிகளும் அறவிடப்படாது.

ரூபாய் 150,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 3500 பணம் அறவிடப்படும்.

ரூபாய் 200,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 10,500 பணம் அறவிடப்படும்.

ரூபாய் 250,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 21,000 பணம் அறவிடப்படும்.

ரூபாய் 300,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 35,000 பணம்அறவிடப்படும்.

ரூபாய் 350,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 52,500 பணம் அறவிடப்படும்.

ரூபாய் 400,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 70,500 பணம் அறவிடப்படும்.

ரூபாய் 1,000,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 286,500 அறவிடப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.