;
Athirady Tamil News

தமிழ் மக்களை ஏமாற்றும் ரணிலின் மற்றுமொரு திட்டம்!!

0

சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவே அதிபர் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எதிர்வரும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது.

ஆனாலும், கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் மாறுபட்ட பல கருத்துக்களை தமிழ் தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடம் முதலில் ஒற்றுமை கிடையாது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வும் சாத்தியமற்றது.

பொருளாதார நெருக்கடியை பகடைக்காயாக கொண்டு நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்துவதாயின், 30 வருடகால யுத்தத்தை வெற்றிகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

இனப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது. மாகாண சபை தேர்தலை நடத்தினால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும்” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.