;
Athirady Tamil News

நம்பிக்கையின் வெளிச்சம்”.. சீனாவில் உச்சமெடுக்கும் கொரோனா.. ஆனா ஜின்பிங் சொல்றதை பாருங்க!!

0

சீனாவில் மனிதர்களை விரட்டி விரட்டி வேட்டையாடி வரும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டத்திற்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையின் வெளிச்சம் நம் முன்னால் தெரிகிறது என்றும், யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தனது புத்தாண்டு வாழத்து செய்தியில் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.
சீனாவில் நிலவி வரும் உண்மையான கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாடு இதுவரை வெளிப்படையாக எதையும் கூறாத நிலையில், அதிபரின் வாழ்த்து செய்தியில் சோகம் இலையாடுவது தெரிவதாக கூறப்படுகிறது.

கொரோனாவின் பிடியில் சீனா
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்றுதான் 3 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வந்தது. கோடிக்கணக்கானோர் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தனர். உயிரிழப்பு ஒருபுறம் என்றால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றது. இவ்வாறு உலகையை உலுக்கிய கொரோனா தொற்று இத்துடன் முடிந்துவிட்டது என அனைத்து நாடுகளும் நிம்மதி அடைந்த நிலையில், சீனாவில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

9,000 பேர் உயிரிழப்பு
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், சீனாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் போராட்டமும் இதற்கு முக்கிய காரணம் என்ற போதிலும், கட்டுப்பாடுகளை நீக்கிய ஒருசில வாரங்களிலேயே அங்கு தொற்று பாதிப்பு கணிசமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, அங்கு நாளொன்றுக்கு 8 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும், 9,000 பேர் வரை உயிரிழந்து வருவதாகவும் அமெரிக்க, பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து
சீனாவில் பெருந்தொற்றின் பாதிப்பு குறித்து மற்ற நாட்டு ஊடகங்கள் தெரிவித்தாலும், இந்த விவகாரத்தில் இப்போது வரை சீனா வாய் திறக்க மறுக்கிறது. வைரஸ் பாதிப்பு எப்படி உள்ளது? எந்த மாதிரியான உருமாறிய வைரஸ்கள் அங்கு பரவி வருகின்றன? என சீனா வெளிப்படையாக கூற வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு சீனா பதிலளிக்கவில்லை. இந்நிலையில்தான், சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலையாடும் சோகம்
அந்த வாழ்த்துச் செய்தியில், ‘நம்பிக்கையின் வெளிச்சம் நம் கண் முன்பே தெரிகிறது. பெருந்தொற்று அச்சுறுத்தல் முழுவீச்சில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களை காப்பாற்றுவதே முதன்மை என்ற நோக்கில் அனைவரும் உழைத்து வருகின்றனர். எனவே யாரும் பயப்பட வேண்டாம். புத்தாண்டை இன்முகத்துடன் வரவேற்போம்’ என ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இதில் ஜி ஜின்பிங் கொரோனா குறித்து வெளிப்படையாக கூறாவிட்டாலும், அந்நாட்டில் கொரோனா மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருவதும், அவரது வார்த்தைகளில் சோகம் இலையாடுவதையும் பார்க்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.