போரால் துபாயில் உணவுப் பஞ்சம்- 7 நாட்கள் மட்டுமே இருப்பு
துபாயில் உணவுப் பஞ்சம் தீவிரமாக உருவாகி வருகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் போரின் தாக்கம் காரணமாக, வளைகுடா நாடுகளில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், 70 சதவீத உணவுப் பொருட்கள் வரத்து தடைபட்டுள்ளது.
துபாயில் தற்போது காய்கறி, பழம், பால் போன்ற fresh உணவுப் பொருட்கள் 7 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக சுவிஸ் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலில், லாஜிஸ்டிக்ஸ் நிபுணர் ஸ்டீபன் பால் தெரிவித்துள்ளார்.
மார்ச் 5 அன்று அவர் கூறியபடி, துபாயில் 10 நாட்கள் இருப்பு இருந்த நிலையில், மார்ச் 8 அன்று அது 7 நாட்களாக குறைந்துள்ளது.
வளைகுடா நாடுகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றன.
விமான சரக்கு சேவைகளும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் 22 சதவீதம் குறைந்துள்ளதால், உணவுப் பொருட்கள் வரத்து மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரெஷ் உணவுப் பொருட்களில் குறைபாடு இருந்தாலும், தானியங்கள், உறைபொருட்கள் மற்றும் நீண்டகாலம் கெடாத உணவுப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதால் மக்கள் பசியால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிலைமை விரைவில் சீராக வேண்டும் என்பதே எச்சரிக்கை.