;
Athirady Tamil News

ஈரான் போரை முடிப்பது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் – டிரம்ப்

0

வாஷிங்டன்,

மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் அமெரிக்கா,இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகள் இடையே பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கூட்டுத்தாக்குதலை தொடங்கி நடத்தி வருகின்றன.

ஈரானும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதால் போரில் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதில் ஈரானின் உச்சதலைவர் காமேனி மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர்கள், ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், ஈரான் போரை முடிப்பது குறித்து நெதன்யாகுவுடன் கலந்தாலோசிக்கப்படும். போரை முடிப்பது குறித்து சரியான நேரத்தில் நான் முடிவெடுப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.