;
Athirady Tamil News

பக்கா “ஸ்கெட்ச்…” குறி வைத்து அடித்த உக்ரைன்.. திணறிய ரஷ்யா! இதுவரை இல்லாத பெரிய அட்டாக்!!

0

புத்தாண்டு தினத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடந்த இந்த தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் சார்பில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. சில நாட்களில் முடியும் என்று முதலில் நினைத்த இந்த போர் பல மாதங்களாகத் தொடர்கிறது.

இந்த போரில் இப்போது ரஷ்யா பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. முதலில் உக்ரைனிடம் கைப்பற்றிய பகுதிகளைக் கூட ரஷ்யா தொடர்ச்சியாக இழுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

புத்தாண்டில் தாக்குதல்
அதேநேரம் தொடர்ந்து போராடும் உக்ரைன் வீரர்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் புத்தாண்டு தினத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதைக் குறித்து வைத்து உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் சார்பில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா
புத்தாண்டு தினத்தன்று ரஷ்யப் படைகள் நிலைகொண்டிருந்த மகிவிகா நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை ரஷ்யா படைகளும் உறுதி செய்துள்ளன. இருப்பினும் 63 ரஷ்ய வீரர்கள் மட்டுமே இதில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ஒரே தாக்குதலில் இத்தனை வீரர்களை ரஷ்யா இழப்பது இதுவே முதல்முறையாகும்.

கீவ் மேயர்
இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே ரஷ்யா தனது பதிலடியைத் தொடங்கிவிட்டது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள முக்கிய கட்டிடங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதலைத் தொடங்கியது. சுமார் 39 டிரோன் மற்றும் ஏவுகணைகள் கீவ் நகரை நோக்கி வந்ததாகவும் இருப்பினும் அவை அத்தனையும் உக்ரைன் ராணும் சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.

தொடரும் போர்
இருந்த போதிலும், கீவ் நகரில் உள்ள சில மின்சார நிலையங்கள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தார். ரஷ்யா போரால் உக்ரைனில் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த ரஷ்யா உக்ரைன் போரால் இரு நாடுகள் மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் தொடர்ந்து முயன்று வந்தாலும் கூட அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.