;
Athirady Tamil News

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது ஈரான் தாக்குதல்

0

தெஹ்ரான்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. பல்வேறு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், ஈராக்கின் எர்பில் நகரிலுள்ள ஹரீர் விமான படை தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது ஈரானின் புரட்சி காவல் படை எனப்படும் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுபற்றி ஈரான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ஈரானின் 5 ஏவுகணைகள் அந்த ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது என தெரிவிக்கின்றது.

இதனால், மேற்காசிய மோதல்களால் ஏற்பட்டு உள்ள பதற்ற நிலை அதிகரித்து உள்ளது. ஏனெனில் இந்த படை தளம், சர்வதேச கூட்டணி படைகளுக்கான முக்கிய மையங்களில் ஒன்றாக உள்ளது.

இதன் மீது நடந்த தாக்குதலானது, அமெரிக்காவின் படையினரின் திறன்களுக்கு எதிராக நடந்த ஈரானின் திட்டமிட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.