;
Athirady Tamil News

அதிரடி இணையத்தின் பொங்கல் வாழ்த்துகள் 2023!!

0

பொங்கல் திருநாள் என்பது உழவர்களுக்காகவும், உழவுக்கு தோள் கொடுத்து உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானுகாவும், உழவன் தன் உயிர் போல நினைக்கும் மாடுகளுக்காகவும் கொண்டபப்படும் ஒரு உன்னதமான விழாவாகும்.

போகி, பெரும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டப்படும் இவ்விழாவில் உலகெங்கும் உள்ள தமிழ் குடும்பங்கள் புத்தாடைகள் அணிந்து, பொங்கலிட்டு, மற்றவர்களிடம் தங்களது அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

ஆனால் சில காரணங்களால் ஒரு சிலரால் நேரில் பொங்கல் வாழ்த்துகள் ) கூற முடியாத ஒரு சூழல் இருக்கும். அப்படி பட்டவர்கள் தங்கள் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பக்கூடிய அற்புதமான பொங்கல் வாழ்த்துக்கள் 2023 இதோ உங்களுக்காக. 2023 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகை என்பது ஜனவரி 15 ஆம் தேதி வருகிறது.

இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் கூடி கரும்புகளை சுவைத்து, புதுப்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் என்றாலே கிராமங்களில் ஒரு தனி கொண்டாட்டமாக இருக்கும். வீட்டை வெள்ளை அடித்து, வாசலை நன்கு அலங்கரித்து பொங்கல் கோலமிட்டு உணர்வு பூர்வமாக கொண்டாடக்கூடிய ஒரு நன்னாளாக பொங்கல் திருநாள் திகழ்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.