;
Athirady Tamil News

வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

0

வவுனியா நகரில் நேற்று (2) காலை முதல் இன்று (3) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா நகரில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் பல தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் குளங்கள் நிரம்பி வழிகின்றன. வயல் நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்தோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணிநேர காலப் பகுதியில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி வவுனியா நகரில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.