;
Athirady Tamil News

உலகம் முழுவதும் திடீரென பேஸ் புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!!

0

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக ஊடக தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாரகிராம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று திடீரென ஆயிரக்கணக்கான பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.

அமெரிக்காவை சேர்ந்த பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் தான் அதிக அளவு முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயனர்கள் புதிய டுவிட்டுகளை பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு நீங்கள் பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டிவிட்டீர்கள். அதனால் டுவிட் செய்ய முடியாது என குறுஞ்செய்தி வந்தது. இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதே போல பேஸ்புக்கில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளும், 7 ஆயிரம் இன்ஸ்டாரகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறும்போது “சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம்.

இதற்காக மன்னிக்கவும், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.