;
Athirady Tamil News

ஷாக்.. கண் கருவிழியையே தின்ற பயங்கர கிருமி.. லென்ஸுடன் தூங்கியதால் வந்த வினை.. ‛‛உஷார்’’ மக்களே!! (படங்கள்)

0

லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய இளைஞர் ஒருவரின் கண்ணின் கருவிழியே காணாமல் போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளைஞரின் கரு விழியை மிக அரிதான பயங்கர கிருமி ஒன்று சாப்பிட்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்களில் ‘கான்டாக்ட் லென்ஸ்’ (Contact lens) அணியும் பழக்கம் கொண்ட நபர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய எச்சரிக்கை பதிவாக மாறியிருக்கிறது.

கண்ணாடி டூ கான்டாக்ட் லென்ஸ்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக் க்ரும்ஹோல்ஸ் (21). இவருக்கு கண் பார்வை மங்கியதால் பள்ளிக்காலத்தில் இருந்தே கண்ணாடி (Power Glass) அணிந்து வந்தார். இதனிடையே, கல்லூரியில் சேரவுள்ளதை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடிக்கு பதிலாக ‘கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்து வந்திருக்கிறார் மைக் க்ரூம்ஹோல்ஸ். கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதற்கென தனி கவனம் செலுத்த வேண்டும் என்பது அதை உபயோகிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

அசதியில் தூக்கம்

லென்ஸை கண்ணில் மாட்டும் போதும், எடுக்கும் போதும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். எடுத்த லென்ஸை அதற்கான சொல்யூஷனில் போட்டு வைக்க வேண்டும். லென்ஸை கண்ணில் மாட்டிக் கொண்டு தூங்கக் கூடாது போன்ற ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. இந்நிலையில், மைக் இரண்டு வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வந்த அசதியில் லென்ஸை கழட்டி வைக்காமல சிறிது நேரம் அப்படியே தூங்கிவிட்டார்.

காணாமல் போன கருவிழி

அரை மணிநேரம் தூக்கத்துக்கு பிறகு எழுந்தபோது, அவரது வலது கண்ணில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. லென்ஸ் பயன்படுத்துவோருக்கு இதுபோல கண் எரிச்சல் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம்தான். ஆதலால், மைக்கும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், அடுத்த நாள் காலையில் முகத்தை பார்த்த அவர் பயத்தில் அலறினார். ஏனெனில், அவரது வலது கண்ணில் இருந்த கருவிழியே காணாமல் போய் வெள்ளையாக மாறியிருந்தது. மேலும், அந்தக் கண்ணில் பார்வையும் பறிபோயிருந்தது.

சதையை தின்னும் நுண்ணுயிரி

இதையடுத்து, அடித்து பிடித்து மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மிகவும் அரிதான ‘அக்கன்தமோய்பா கேராடிட்டிஸ்’ (Acanthamoeba keratitis) எனும் சதையை தின்னும் நுண்ணுயிரி அவரது கருவிழியை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். லென்ஸை கழட்டாமல் தூங்கியதால் அந்த நுண்ணுயிரி தாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு கண்ணில் நிரந்தரமாக பார்வையிழந்த மைக், தன்னை போல மற்றவர்களுக்கு இந்த கதி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சமூக வலைதளங்களில் தனது அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.