;
Athirady Tamil News

அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; மத்திய கிழக்கில் போர் விமானங்கள் குவிப்பு

0

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.

இந்த ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

ஆரம்பத்தில் பிடிகொடுக்காமல் இருந்த ஈரான், ஒரு கட்டத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. இருநாடுகளிடையே ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் எப்22, எப்35, எப்16 உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை, மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்கா குவித்து வருகிறது.

மேலும், விமானங்களுக்கு ஏற்கனவே, யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர்.போர்டு என்ற விமானம் தாங்கி கப்பல், கரீபியன் பகுதியிலிருந்து தற்போது மத்திய அட்லாண்டிக் பகுதியில் மத்திய கிழக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அங்கு போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் ராணுவ பலத்தை ஈரான் அமைந்துள்ள மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.