;
Athirady Tamil News

மொரீசியஸ் தீவில் சிவராத்திரி விழா கோலாகலம்: சிவன் சிலைகளுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு !!

0

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான மொரீசியத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 12 லட்சம் பேரில் 52 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினராக உள்ளனர். தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் தைப்பூச திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவதை போலவே இந்திய வம்சாவளினர் அதிகம் உள்ள மொரீசியஸ் தீவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் 108அடி உயரம் கொண்ட சிவபெருமான் சிலை அமைந்துள்ள மங்கள் மஹாதேவ் கோவிலில் மகா சிவராத்திரி விழா கலைக்கட்டியுள்ளது.

மராட்டியம், ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களை பூர்விகமாக கொண்டவர்கள் ஏராளமானோர் உற்சாகமாக பாதயாத்திரை வந்து மங்கள் மஹாதேவை தரிசிக்கின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு அமைப்பினர் இலவசமாக உணவு பொருட்களை வழங்குகின்றனர். ஒரு வாரமாக கலைகட்டி உள்ள மகா சிவராத்திரியின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 5 மணி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற இருக்கின்றன. இவற்றை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மங்கள் மகாதேவ் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.