;
Athirady Tamil News

சமூக வலைதளத்தில் மோதிய பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் – காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!!

0

கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்துரி, பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை சந்தித்த புகைப்படத்தை ரூபா ஐ.பி.எஸ். வெளியிட்டார்.

சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலருக்கு ரோகிணி சிந்துரி அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக ரூபா குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரை மனநோயாளி என விமர்சித்தார் ரோகிணி சிந்துரி. இந்நிலையில், இரு அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் போக்கு வைரலானதைத் தொடர்ந்து பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக்கொண்ட ரோகிணி சிந்துரி ஐ.ஏ.எஸ். மற்றும் ரூபா ஐ.பி.எஸ். ஆகிய இருவரையும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.