;
Athirady Tamil News

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னைய சஞ்சிகைகள் இருப்பின் வழங்குமாறு கோரிக்கை!!

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இருந்து வெளியிடப்பட்ட கலைமலர் சஞ்சிகையின் பிரதிகள் இருப்பின் கலாசாலை நூலகத்திற்கு வழங்கி உதவுமாறு கலாசாலை அதிபர் கோரியுள்ளார். கலாசாலை நூற்றாண்டைக் காணும் தருணத்தில் கலாசாலையுடன் தொடர்புடைய வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்த உதவியை மேற்கொள்ளுமாறு கலாசாலையில் கற்ற முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் அதிபர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

1923 இற்கும் 1974 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த வெளியீடுகள் பற்றிய தரவுகளோ அல்லது நூல்களோ கலாசாலை நூலகத்தில் இல்லை எனவும் அத்துடன் கலைமலர் 18, கலைமலர் 19 (1977 – 1978) கலைமலர் 22 (1981) கலைமலர் 28, கலைமலர் 29, கலைமலர் 30 (1990 – 1998 இடையில்) கலைமலர் 34 (2002) ஆகிய கலைமலர் சஞ்சிகைகள் கலாசாலை நூலகத்தில் இல்லை எனவும் குறிப்பிட்ட அவர் இந்தப் பிரதிகள் எங்காவது இருப்பின் கலாசாலைக்கு (021 2230323 என்ற இலக்கத்திற்கு)அறியத்தந்தால் அவற்றை வந்து பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.