;
Athirady Tamil News

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

0

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அன்றாடத் தேவையைவிட அதிகளவிலான சமையல் எரிவாயு கொள்கலன்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் நாளொன்றுக்கு 80,000 முதல் 100,000 வரையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.