;
Athirady Tamil News

தென்கிழக்குப் பல்கலைக்கழக விநாயகர் ஆலயத் திருப்பணிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி!

0

தென்கிழக்குப் பல்கலைக்கழக விநாயகர் ஆலயத் திருப்பணிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக (SEUSL) வளாகத்தினுள் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்த விநாயகர் ஆலயத்தில் மாவுக்கல் (Tiles) பதிக்கும் அவசரத் திருப்பணிகளுக்காக, நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் (ரூபா 1,00,000) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த புகழ்பெற்ற மனிதநேயச் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் நினைவாக இயங்கிவருகின்ற “கௌரி சங்கரி தவராசா ஞாபக அறக்கட்டளை” (Gowri Sankari Thavarasa Memorial Foundation) ஊடாக இந்த நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்த விநாயகர் ஆலயத்தினைச் சீரமைத்து, அழகுபடுத்தும் நோக்கில் மாவுக்கல் பதிக்கும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்புனிதமான ஆன்மீகப் பணியைச் சிறப்பாக நிறைவு செய்வதற்குப் பெருமளவு நிதி தேவைப்படுவதாகப் பல்கலைக்கழக இந்து சங்கம் (Hindu Society SEUSL) அண்மையில் பகிரங்க கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தது.

இக்கோரிக்கையினை ஏற்று, ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து முன்னெடுப்பதற்காகக் “கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை” யின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்கள் உடனடியாக முன்வந்து இந்த ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.