புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வு முடிவுகள் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தமது முடிவுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk https://www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk https://www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று, பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
பரீட்சை முடிவுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் அமைப்பு மற்றும் முடிவுகள் கிளையை 011 278 4208, 011 278 4537 அல்லது 011 278 5922 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.