;
Athirady Tamil News

சார்தாம் யாத்திரையில் முன்பதிவு வசதி: பக்தர்களின் வசதிக்காக உத்தராகண்ட் அரசு அறிமுகம்!!

0

பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட நான்கு தலங்களின் புனித யாத்திரையில் இனி நீண்டநேரக் காத்திருப்புக்கு அவசியமில்லை. பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு உள்ளிட்ட புதிய வசதிகளை உத்தராகண்ட் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

பாஜக ஆளும் மாநிலமான உத்தராகண்டில் முக்கியப் புனித யாத்திரையாக ‘சார்தாம்’ உள்ளது. இதில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி. யமுனோத்ரி ஆகிய 4 சிவத் தலங்கள் இடம் பெற்றுள்ளன. இவை, இமயமலையில் அமைந்திருப்பதால், உத்தராகண்டை தேவபூமி எனவும் அழைப்பது உண்டு.

இந்த நான்கு தலங்களுக்கு தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் புனித யாத்திரை வருகின்றனர். இவர்கள் இந்த நான்கு தலங்களின் தரிசனத்திற்காக பலமணி நேரம் கடும் குளிரில் காத்திருக்கும் நிலை ஏற்படுவதுண்டு.

காத்திருப்புக்கு அவசியமில்லை

இதை தவிர்க்க உத்தராகண்ட் அரசு பல புதிய வசதிகளை ஏற் படுத்தியுள்ளது. இதில் முக்கியமாக தரிசனத்திற்கு முன்பதிவு முறைஅறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இணையதளம் (registrationand touristcare.uk.gov.in), வாட்ஸ்-அப்எண் (91-8394833833), இலவச போன் (0135-1364) மற்றும் touristcareuttrakhand எனும் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். இதனால் நான்கு தலங்களின் புனித யாத்திரையில் இனி நீண்டநேரக் காத்திருப்புக்கு அவசியமில்லை.

இந்த முன்பதிவை இமய மலையில் நடைபயணமாக வருபவர்களும் செய்யலாம். அதில் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேர முடியாமல் போகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு நேரம்தவறியவர்களுக்கு அடுத்த வாய்ப்பு அளிக்கவும் வசதி செய் யப்பட்டுள்ளது. இதுபோன்ற உதவிகளுக்காக உத்தராகண்ட் அரசின் சுற்றுலாத் துறை சார்பில்சுற்றுலா நண்பன் எனும் பெயரில்பணியாளர்களும் அமர்த்தப்பட் டுள்ளனர். இவர்கள் பக்தர்களுக்கு முன்பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்களில் உதவுவார்கள்.

மொழிப்பிரச்சினை

அதேபோல், தமிழகம் உள்ளிட்ட தென் மாநில பக்தர்களுக்கு புனித யாத்திரையில் மொழிப்பிரச்சினை ஏற்படுவதுண்டு. இதையும் எதிர்கொண்டு சமாளிக்க உத்தராகண்ட் அரசு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. இதில், நான்கு தலங்களின் பாதுகாப்பு பணியில் மாநிலக் காவல்துறை சார்பில் போலீஸார் புதிதாக அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் பக்தர்களுக்கு உதவும் வகையில், தமிழ் உள்ளிட்ட பல பிராந்திய மொழிகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவா, கேரளா மாநிலங்களை போன்று இவர்களை தனிப்பிரிவாக உருவாக்கவும் திட்டமிடப்படுகிறது.

இந்த முன்பதிவு முறை கடந்த பிப்ரவரி 21 முதல் தொடங்கப்பட்டது. அதற்குள் நேற்றுவரை, சுமார் ஒரு கோடி பக்தர்கள் தரிசனங்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, உத்தராகண்டின் இமயமலைப் பகுதியில் கைப்பேசிகளின் இணையதள இணைப்பில் சிக்கல் வருவதுண்டு. இதையும் சமாளிக்க உத்தராகண்ட் சுற்றுலாத்துறை, 11 பகுதிகளில் வைஃபை வசதி அளிக்கவும் திட்டமிடுகிறது. இதற்காக, தனியார் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நான்கு தலங்களுக்கும் செல்ல ஏற்கெனவே ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. இதற்குமுன் ஜம்மு வைஷ்ணவதேவி கோயிலில் இதுபோல் முன்பதிவு உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதே வகையில், உத்தராகண்ட் அரசு சார்தாம் யாத்திரையிலும் அமலாக்குகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.