விமானத்தில் ஏறும்போது நிலைதடுமாறிய டொனால்ட் ட்ரம்ப் ; வைரலான வீடியோ

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ்ஒன் விமானத்தில் புறப்பட்டார்.
விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறினார்.
படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக்கொண்டார். பின்னர், அவர் பட்டிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் நுழைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Donald Trump can’t walk up a flight of stairs, he’s unfit to be President.
…am I doing it right? 👀😂 pic.twitter.com/09x0OdcM77
— Ryan Shead (@RyanShead) June 8, 2025