;
Athirady Tamil News

பிரபல கனடா நடிகர் மரணம்: ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்!!

0

கனடாவை சேர்ந்த பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான கார்டன் பின்சென்ட் (92) வயது மூப்பின் காரணமாக உடல்நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலமானார். அவருக்கு சார்மியன் கிங் என்ற மனைவியும், லியா, பாரி, பெவர்லி என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர். கார்டன் பின்சென்ட்டின் மரணம் தொடர்பான அறிக்கையை அவரது குடும்பத்தினர் வெளியிட்டனர். அதில், ‘கார்டன் பின்சென்ட்டின் மகள்கள் லியா மற்றும் பெவர்லி மற்றும் அவரது மகன் பாரி ஆகியோர் தங்களது தந்தையின் மரணத்தால் கவலையடைந்துள்ளனர்.

மறைந்த கார்டன் பின்சென்ட், கனடாவையும், மக்களையும், அதன் கலாசாரத்தையும் நேசித்தார்’ என்று தெரிவித்துள்ளனர். 1950ம் ஆண்டுகளில் ராணுவத்தில் பணியாற்றிய கார்டன் பின்சென்ட், நான்கு ஆண்டுகள் பணிக்கு பின்னர் 1962ம் ஆண்டு ஸ்ட்ராட்ஃபோர்ட் விழாவில் பங்கேற்றார். சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமான நடிகரானார். பாடல்களை எழுதியும், சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.