;
Athirady Tamil News

கனடாவில் அந்த அதிஷ்டசாலி யார் – உடனே விரைய அறிவிப்பு !!

0

கனடாவில் லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவைரயில் அந்த பரிசுத் தொகையை உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார். ஓ.எல்.ஜீ லொத்தர் சீட்டிழுப்பில் 373118.20 டொலர்கள் பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி ஸ்காப்ரோவில் நடைபெற்ற சீட்டிழுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. லொட்டோ மெக்ஸ் பரிசு சீட்டிழுப்பில் 07, 10, 18, 29, 38, 43, 50 என்ற இலக்கங்களுடன் 41 என்ற போனஸ் இலக்கமும் கொண்ட லொத்தர் சீட்டினை கொள்வனவு செய்த நபரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டில் பரிசு வென்றவர்கள் தங்களது பரிசுத் தொகையை உரிமை கோருவதற்கு ஓராண்டு காலம் கால அவகாசம் வழங்கப்படுகின்றது.

உரிமை கோரப்படாத பரிசுத் தொகை லொத்தர் சீட்டு நிறுவனத்தின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.