;
Athirady Tamil News

இது பிரதமரின் ஏப்ரல் ஃபூல் என்று சொல்வார்கள்.. காங்கிரசை கிண்டலடித்த மோடி!

0

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். போபால்-டெல்லி இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கிண்டலடித்தார். அவர் பேசியதாவது:- இந்த நிகழ்வு ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் என என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது, ஏன் ஏப்ரல் 1ம் தேதியில் வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். இதுகுறித்த செய்தி வெளியாகும்போது, இது பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் ஃபூல் ஏமாற்றுவேலை என எனது காங்கிரஸ் நண்பர்கள் கூறுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், நீங்களே தற்போது பார்க்கிறீர்கள். ஏப்ரல் 1-ம் தேதி திட்டமிட்டபடி வந்தே பாரத் ரயில் சேவை கொடி அசைத்து துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இது நமது திறமை மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளம். வந்தே பாரத் ரெயில் இந்தியாவின் புதிய வளர்ச்சியின் அடையாளம்.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதற்கான தேவை இருக்கிறது. முந்தைய ஆட்சியின்போது ஒரே ஒரு குடும்பம்தான் இந்தியாவின் முதல் குடும்பம் என்று நினைத்தார்கள். நடுத்தர குடும்பங்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. இதற்கு உதாரணம் இந்திய ரெயில்வே. இந்திய ரெயில் என்பது சாமானியர்களுக்கானது. கடந்த 9 ஆண்டுகளில், இந்திய ரெயில்வேயை உலகின் சிறந்த ரெயில்வேயாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 900 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வந்தே பாரத் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.