;
Athirady Tamil News

கார் மீது லாரி மோதி விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு !!

0

மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு சாலை மார்க்கமாக இன்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். ராம்பான் அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது.

இதையடுத்து பாதுகாப்பு போலீசார் மந்திரியை காரிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் மந்திரி கிரண் ரிஜிஜு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மத்திய மந்திரி சென்ற கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.