;
Athirady Tamil News

தமிழக-ஆந்திர மீனவர்கள் நடுக்கடலில் திடீர் மோதல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!!

0

ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே தமிழக மீனவர்களும் ஆந்திர மீனவர்களும் திடீரென மோதிக் கொண்டனர். இதனால் நெல்லூர் கடலோர மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆந்திர எல்லை பகுதியில் மீன் பிடித்து வந்தனர்.

நேற்று அவர்கள் அல்லூர் மண்டலம் இசக்கப்பள்ளி கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை கண்ட ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் ஆந்திர எல்லையில் மீன்பிடிப்பதாகவும், தங்களது வலைகளை அவர்கள் சேதப்படுத்தியதாகவும், அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று உள்ளூர் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு படகில் சென்றனர். ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களிடம் ஏன் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தினீர்கள் என தட்டி கேட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு திடீெரன மோதிக் கொண்டனர். இதில் கல்வீசி தாக்கியதில் பல மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் கரைக்கு திரும்பிய ஆந்திர மீனவர்கள் இசைக்க பள்ளி கடலோர போலீஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவ தலைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.