;
Athirady Tamil News

விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணிப் பெண்கள்: இன பாகுபாடு இல்லாமல் மணிப்பூர் மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல்

0

கொல்கத்தா: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் விமான விபத்​தில் விமானப் பணிப் பெண்​கள் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். அவர்​கள் இனக் கலவரத்​தால் பாதிக்​கப்​பட்​டுள்ள மணிப்​பூரைச் சேர்ந்த குகி மற்​றும் மைதேயி இனத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​பது தெரிய வந்​துள்​ளது.

ஏர் இந்​தியா விமானத்​தில் மொத்​தம் 10 பணிப்​பெண்​கள் இருந்​துள்​ளனர். அவர்​களில் மணிப்​பூர் மாநிலத்​தின் குகி இனத்தை சேர்ந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் மற்​றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்​தோய் சர்மா காங்​பிரெய்​லாக்​பம் ஆகிய இரு​வரும் அடங்​கு​வர். இவர்​களும் விமான விபத்​தில் உயி​ரிழந்​தனர். அகம​தா​பாத்​தில் விமானம் விபத்​துக்​குள்​ளான தகவல் அறிந்​ததும் இவர்​களது குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். லாம்​நந்​தி​யம், கந்​தோய் இரு​வரும் உயி​ரிழந்த தகவல் அறிந்​தவுடன் சமூக அமைப்​பினர், மணிப்​பூர் மக்​கள் என அனை​வரும் தங்​கள் இன வேறு​பாட்டை மறந்து அந்​தக் குடும்​பத்​தினருக்கு இரங்​கல் தெரி​வித்​தனர். குகி – மைதேயி இனங்​களை மறந்து அரசி​யல் கட்​சி​யினரும் குடிமக்​களும் பல்​வேறு அமைப்​பினரும் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். அத்​துடன் சோக​மான இந்த நேரத்​தில் 2 குடும்​பத்​தினருக்​கும் ஆதர​வாக இருப்​போம் என்று தெரி​வித்​துள்​ளனர்.

தவிர சமூக வலை​தளங்​களில் அந்த 2 விமானப் பணிப்​பெண்​களின் ஆத்மா சாந்​தி​யடைய ஆழ்ந்த இரங்​கல்​கள் குவிந்​தன. இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள மைதேயி பாரம்​பரிய சொசைட்​டி​யின் செய்​தித் தொடர்​பாளர் கூறும்​போது, ‘‘மணிப்​பூர் மக்​கள் அனை​வருமே இதயம் நொடிந்து போயுள்​ளனர். குகி, மைதேயி இனத்தை பொருட்​படுத்​தாமல், அனை​வருமே இறந்த அந்த இளம்​பெண்​களுக்​காக பிரார்த்​தனை செய்​தனர். இரங்​கல் தெரி​வித்து வரு​கின்​றனர். கடந்த 2 ஆண்​டு​களாக மணிப்​பூரில் நடை​பெற்று வரும் குக்கி – மைதேயி இனக் கலவரம், இந்த 2 இளம்​பெண்​களின் இறப்​பால் மங்​கி​யுள்​ளது. அவர்​கள் வானத்​தின் தேவதைகள். அந்த 2 பெண்​களின் மரணம், 2 இனங்​களை ஒன்​றிணைக்க உதவி​யுள்​ளது. இந்த மனித உயிர் எத்​தனை அரியது என்​பதை அவர்​களுக்கு உணர்த்தி உள்​ளது. வாழும் வரை அமை​தி​யாக ஒன்​றிணைந்து வாழ வேண்​டும் என்​பதை அவர்​களு​டைய மரணங்​கள் உணர்த்தி உள்​ளது’’ என்​றார்.

இதற்​கிடை​யில், லாம்​நந்​தி​யம் மற்​றும் கந்​தோய் ஆகியோரின் குடும்​பத்​தினர் அகம​தா​பாத் விரைந்து சென்​றனர். அங்கு உடல்​களை அடை​யாளம் காண, டிஎன்ஏ பரிசோதனைக்​காக தங்​கள் ரத்த மாதிரி​களை வழங்​கினர். உயி​ரிழந்த விமான பணிப்​பெண்​களின் ஆத்மா சாந்​தி​யடைய டெல்​லி​யில் உள்ள குகி இன மாணவர் சங்​கம் மெழுகு​வர்த்தி ஊர்​வலத்​துக்கு ஏற்​பாடு செய்​துள்​ளது. உயி​ரிழந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் குடும்​பத்​தில் அவர் மட்​டும்​தான் வரு​வாய் ஈட்​டு​பவ​ராக இருந்​துள்​ளார். இவரது குடும்​பத்​தினர் காங்​போக்பி என்ற பகு​தி​யில் வாடகை வீட்​டில் வசிக்​கின்​றனர். எக்ஸ் வலை​தளத்​தில் ஒரு​வர் கூறும்​போது, ‘‘உ​யிருடன் இருக்​கும்போது குகி – மைதேயி என பிரி​வினை பார்க்​கிறோம். ஆனால், மரணத்​தில் அனை​வரும் ஒரே விதி​யைத்​தான் சந்​திக்​கிறோம் என்​பதை 2 விமான பணிப்​பெண்​களும் உணர்த்தி உள்​ளனர்’’ என்று தெரி​வித்​து உள்​ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.