பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா: பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் முடிவு

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை பிரெஞ்சு நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.
பணக்காரர்களுக்கு கூடுதல் வரி
மிக அதிக செல்வம் படைத்த பணக்காரர்களுக்கு, அவர்களுடைய சொத்துக்கு குறைந்தபட்சம் 2 சதவிகிதம் வரி விதிக்கும் மசோதா ஒன்று முன்வைக்கப்பட்டது.
பிரான்ஸ் பொருளாதார நிபுணரான கேப்ரியல் சுக்மேன் என்பவரது பெயரால் ’சுக்மேன் வரி’ என அந்த வரி அழைக்கப்பட இருந்தது.
1,800 பணக்கார குடும்பங்களைக் குறிவைத்து விதிக்கப்படும் அந்த வரியால், ஆண்டுக்கு 20 பில்லியன் யூரோக்கள் வரை அரசுக்குக் கிடைக்கும் என கேப்ரியல் தெரிவித்திருந்தார்.
மிகப்பெரிய பணக்காரர்களில், மிகக் குறைவாக வரி செலுத்துபவர்களை இலக்காக வைத்து இந்த வரி விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், பிரதமர் François Bayrou அரசு அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த மசோதா, முதலீட்டாளர்களுக்கும் அரசுக்கு நிதி வழங்குவோருக்கும் பாதகமானது என நிதி அமைச்சர் Eric Lombard தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மேலவையில் அந்த மசோதா பெரும்பான்மையுடன் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க, 188 பேர் அதை எதிர்த்து வாக்களித்ததால் மசோதா தோல்வியடைந்துவிட்டது.