;
Athirady Tamil News

இது தாங்க சீஃப் கெஸ்ட்டு – உணவகத்தை திறந்து வைத்து அசத்திய பசுமாடு!!!

0

உத்திர பிரேதச மாநிலத்தின் லக்னோவில் உணவகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் மாடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதோடு மாடு அந்த உணவகத்தை திறந்து வைத்து இருக்கிறது. லக்னோவின் முதல் பசுமை உணவகமான இது, ‘ஆர்கானிக் ஒயாசிஸ்’ என்ற பெயரில் திறக்கப்பட்டு உள்ளது. முன்னாள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சைலேந்திர சிங் இந்த பசுமை உணவகத்தின் உரிமையாளர் ஆவார். பசுமை பொருட்களால் சமைக்கப்பட்ட உணவு வகைகள் மட்டுமே இந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. பசுமை உணவகத்தை மாடு திறந்து வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, மாடு மஞ்சள் நிற ஆடை அணிந்த நிலையில் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

மேலும் அங்கு கூடியிருந்த பொது மக்கள் மாட்டை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பசுமை உணவக ஊழியர்கள் ஆர்கானிக் ஒயாசிஸ் என்று அச்சிடப்பட்ட டி-சர்ட்களை அணிந்துள்ளனர். “நமது விவசாயம் மற்றும் பொருளாதாரம் மாடுகளை சார்ந்தே இருக்கிறது. இதன் காரணமாகத் தான் எங்களது உணவகத்தை கோமாதா திறந்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மக்கள் ஆரோக்கிய உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்று தற்போது நினைக்க துவங்கிவிட்டனர்.

” “எனினும், இரசாயன பொருட்களால் பதப்படுத்தப்படும் உணவு வகைகளே தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சொந்த உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் பதப்படுத்தும் இந்தியாவின் முதல் உணவகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உணவை சாப்பிட்டால், மக்கள் வித்தியாசத்தை உணர்ந்து பின் இதற்கான தேவை அதிகரிக்கும்,” என்று பசுமை உணவக உரிமையாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.