;
Athirady Tamil News

ஐயோ, இதுவும் கண்ணை உறுத்துதே.. பகீரை கொட்டிய தாலிபன்கள்.. கண்ணீரில் ஆப்கன் பெண்கள்.. அதென்ன 2 இடம்? !!

0

உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும்நிலையில், ஆப்கன் நாட்டில் மட்டும் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. என்ன அது? ஆப்கானிஸ்தானின் இரண்டு மாகாணங்களில் ரமலான் பண்டிகை கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். பாக்லான் மற்றும் தகார் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கிட்டத்தட்ட பெண் குழந்தைகள், அங்கே 2 வருடங்களாகவே ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள்.

ஆப்கன் பெண்கள்: அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்கவும் அனுமதி அளிக்கவில்லை. ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூஙகா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை பெண்கள் அணுகக்கூடாது என்று அடுத்த உத்தரவை பிறப்பித்தது தாலிபன் அரசு..

கல்வி உரிமை: பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் டாக்டர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல, அங்குள்ள துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில், முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்களாம்.. அங்குள்ள பொம்மைகள் அனைத்தும் முகத்தை மறைத்தே காட்சியளித்து கொண்டிருக்கின்றன… புர்கா அணியாமல் வெளியே செல்லக்கூடாது, சிறுவர்கள் கேம் சென்டர்களுக்கு செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, குறிப்பாக ஐநா சபையில் எந்த துறையிலும் ஆப்கன் பெண்கள் வேலையில் இருக்கக்கூடாது, ஜிம் போகக்கூடாது, பூங்காக்களுக்கு போகக்கூடாது இப்படியான உத்தரவுகளும் தொடர்கின்றன.. சில நாட்களுக்கு முன்புகூட, தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள் அமைந்துள்ள உணவகத்திற்கு பெண்கள் செல்லவும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தனர்.. பெண்கள் மட்டுமல்லாது, குடும்பங்களும் இந்த உணவகத்திற்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர்.

கிளம்பிய புகார்கள்: அதாவது இதுபோன்ற பசுமையான இடங்களை கொண்ட ஓட்டல்களில், ஆண்களும், பெண்களும் ஒன்றுசேர்கிறார்களாம்.. இப்படி ஒரு புகார் கிளம்பியதால்தான், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காரணம் சொல்கிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடகூட பெண்களுக்கு உரிமை இல்லாத சூழல் நிலவி கொண்டிருக்கிறது.. உலகமே ரம்ஜான் பண்டிகையை இன்றைய தினம் கொண்டாடி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பரவலான கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.. ஆனால், அந்த நாட்டின் 2 மாவட்டங்களில் நடைபெறும் ஈத் கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான் மாவட்டம் மற்றும் வடகிழக்கு மாவட்டமான தகாரில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.. “ஈத் பண்டிகை நாட்களில் பெண்கள் குழுக்களாக வெளியே செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று உள்ளூர் தலிபான் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மலாலா கருத்து: இந்த உத்தரவுகள் ஆப்கானிஸ்தான் முழுவதற்கும் பொருந்தாது, ஆனால் குறிப்பிட்ட இந்த 2 மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்துமாம்.. இந்த அறிவிப்பானது மிகுந்த அதிர்ச்சியை பரவலாக ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நோபல் பரிசு பெற்ற மலாலா, “ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக எனது இதயம் செல்கிறது” என்று கருத்து கூறியுள்ளது பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.