;
Athirady Tamil News

“6 இளம்பெண்கள்.. நடுவே ஒரு இளைஞர்..” 81 லட்சத்தில் மனைவிகளுக்காக மெகா பெட்! கதறும் 90s கிட்ஸ்!!

0

பிரேசில் நாட்டில் ஒரே வீட்டில் 6 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவர், மிகப் பெரிய பிரம்மாண்ட பெட்டை உருவாக்கியுள்ளார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த இணைய உலகில் எல்லாமே மாறி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் தவறு என்று நாம் நினைத்ததை கூட இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பல உதாரணங்கள் இருக்கிறது.

இதில் சில மாற்றங்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற போதிலும், அதை நம்மால் தடுக்க முடிவதில்லை. அதில் சில வினோதமான மாற்றங்கள் இணையத்திலும் கூட பேசுபொருளாகி வருகிறது.

அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த காலத்தில் பிரேக் அப் என்றால் அடுத்த நொடி அதைத் தூக்கிப் போட்டுவிட்டு அடுத்து நபரை டேட்டிங்கிற்கு பார்க்கும் போக்கு அதிகரித்தே வருகிறது. அதேபோல ஒருவர் ஒரே நேரத்தில் பலருடன் உறவில் இருக்கும் பாலிகாமி பலதரப்பட்ட உறவு சில தரப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயமாக மாறி வருகிறது.

சில குறிப்பிட்ட நாடுகளில் பலரும் இதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். அப்படித்தான் பிரேசில் நாட்டில் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் ஆறு மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர்கள் மனைவிகளுக்குள் நல்ல புரிதல் இருப்பதால் அவர்களுக்குள் சண்டை எதுவும் ஏற்படுவதில்லையாம்.

இதனிடையே இவர் தனது அனைத்து மனைவிகளுடன் ஒரே நேரத்தில் தூங்க 20 அடி நீளத்தில் படுக்கை ஒன்றை ரெடி செய்துள்ளார். இந்த படுக்கைக்காக மட்டும் அவர் ரூ. 81.54 லட்சம் செலவிட்டுள்ளார். ஆர்தர் ஓ உர்சோ என்ற இவர் தனது 6 மனைவிகளுடன் ஒரே நேரத்தில் இருக்க 20-அடி அகலம் 7-அடி உயரம் கொண்ட படுக்கைக்குத் தான் இத்தனை லட்சம் செலவழித்துள்ளார். இது தனது இல்லற வாழ்க்கையைச் சுவாரசியமாக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.