;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் – 29 பேர் பலி

0

லாகூர்,

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளிலும் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டி வருகின்றன.

பாகிஸ்தானில் தாக்குதல்
இதனிடையே, பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று முன் தினம் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரி இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் இன்று திடீர் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தானின் பக்தியா , பக்திகா, கனுர் ஆகிய பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 29 பேரும் பயங்கரவாதிகள் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.