நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக உலக சந்தையிலும் உள்நாட்டிலும் எரிபொருள் விலைகளில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைப்பதாக அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட எரிபொருள் விலை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளுக்கு அமைவாக, இந்த தமது எரிபொருள் விலையை திருத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஒட்டோ டீசல் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 95 ஒக்டேன் பெட்ரோல் (495 ரூபா), லங்கா சுப்பர் டீசல் (478 ரூபா) மற்றும் மண்ணெண்ணெய் (285 ரூபா) ஆகிய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.