;
Athirady Tamil News

அரசு அதிகாரிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜயின் செயல்

0

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல், அரசு நிர்வாக பணிகளில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, காலையில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லும் முக்கிய கோப்புகளில், அன்றைய தினமே மாலைக்குள் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டு திருப்பி அனுப்பி வைப்பது அரசு அதிகாரிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய் தினசரி காலை 9:30 முதல் 10 மணிக்குள் தலைமை செயலகம் வந்து, மாலை 6:00 மணி வரை நிர்வாக பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார். இது குறித்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறும்போது,

தமிழகம் இரண்டு மடங்கு வேகமாக வளர வாய்ப்பு
“முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோரிடம் பணியாற்றியுள்ளேன். ஆனால், முதல்வர் விஜய் இவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக உள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

முந்தைய ஆட்சி காலங்களில் கோப்புகள் திரும்பி வர குறைந்தபட்சம் இரண்டு நாட்களாகும் நிலை இருந்தது.

ஆனால் இப்போது, கமிஷன் தொடர்பான பிரச்சினைகள் இல்லாததாலும், அமைச்சர்களும் உடனுக்குடன் கோப்புகளில் கையெழுத்திடுவதாலும், கோப்புகள் நாட்கணக்கில் காத்திருக்காமல் மணிக்கணக்கில் திரும்பி வருகின்றன.

இந்த வேகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், தமிழகம் இரண்டு மடங்கு வேகமாக வளர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.