பல தரப்பினரிடம் இருந்து மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம். ஏனெனில், மத்திய அரசு பொறுப்பேற்பது என்பது சேவைகளை இன்னும் சிறப்பாகப் பேணுவதற்காக மட்டுமே இருக்க வேண்டும்.
வெறும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதாலோ அல்லது அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதாலோ மட்டும் சேவைகளை மேம்படுத்திவிட முடியாது.
தற்போதைய சூழ்நிலையில், இந்த வைத்தியசாலையை உடனடியாக ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஏனெனில், ஒரு ஆதார வைத்தியசாலைக்கும் (Base Hospital) மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் (DGH) இடையே உள்ள கட்டமைப்பு ரீதியான இடைவெளி மிகப்பெரியது.
அரசியல் காரணங்களுக்காக நான் இதன் பெயர் பலகையை ‘DGH’ என்று மாற்றிவிட முடியும், ஆனால் அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் பெயர் மாற்றுவது எங்களது வழக்கமும் அல்ல, நோக்கமும் அல்ல. என தெரிவித்து இருந்தார்.
