;
Athirady Tamil News

நெருங்கும் ரஷ்ய படை.. துப்பாக்கியோடு சுற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..தற்கொலை முடிவா? திடுக் தகவல்!!

0

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அதிபர் மாளிகை உள்ள தெருவை ரஷ்ய படைகள் நெருங்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தற்போது விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையில் துப்பாக்கியுடன் வலம் வருகிறார். இதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இதற்கிடையே தான் ரஷ்யாவை சமாளிக்கும் நோக்கத்தில் உக்ரைன் நேட்டோ நாடுகள் பட்டியலில் இடம்பெற துடித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்தது.

இந்நிலையில் தான் உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ல் ரஷ்யா போர் தொடுக்க துவங்கியது. தற்போது ஓராண்டுகள் தாண்டியும் இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளன.

இருப்பினும் தலைநகர் கீவ் நகரை மட்டும் ரஷ்யா படைகளால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. கீவ் நகரில் உள்ள பங்கோவா தெருவில் தான் உக்ரைன் அதிபர் மாளிகை உள்பட பல்வேறு இடங்கள் உள்ளன. இங்கு தான் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இருக்கிறார். இதனால் கீவ் நகரை கைப்பற்றி அதிபர் ஜெலன்ஸ்கியை சிறை பிடிக்க ரஷ்ய படைகள் முயன்று வருகின்றன.

இது நடந்தால் உக்ரைன் முழுவதுமாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். இந்நிலையில் தான் உக்ரைன் வீரர்கள் ரஷ்யா படையினரை பங்கோவா தெருவை நெருங்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதற்கிடையே தான் நீண்ட நாளுக்கு பிறகு 2 தினங்களுக்கு முன் ரஷ்யா படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது ரஷ்யாவின் போர் நடவடிக்கை தீவிரமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கீவ் நகரின் அதிபர் மாளிகையை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையில் துப்பாக்கியுடன் சுற்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரஷ்யா படை நெருங்கினால் அவர் தற்கொலை செய்து விடுவாரா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒன் ப்ளஸ் ஒன் என்ற தொலைக்காட்சி சேனலுக்கு முக்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: கைத்துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உக்ரைன் அதிபர் ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை நீங்கள் ஒருபோதும் நினைத்து பார்க்க வேண்டாம். ஏனென்றால் ரஷ்ய படைகளிலும் சிக்கவது என்பது பெரிய அவமானமாகும்.

கீவ் நகருக்குள் நுழைந்து பங்கோவா தெருவுக்குள்ளேயே ரஷ்யா நுழைய முயற்சிக்கிறது. இது தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனால் நுழைந்து விட்டால் நிர்வாகம் அவர்கள் வசம் செல்லும். நாங்கள் அங்கு இருக்க முடியாது. இதனால் அதிகமான படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறுதிவரை நாங்கள் போராடுவோம். ஒருபோதும் வெற்றியை விட்டு கொடுக்கமாட்டோம்” என்றார். இந்த வேளையில் ரஷ்யாவால் சிறை பிடிக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளவா துப்பாக்கி வைத்துள்ளீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஜெலன்ஸ்கி, ‛‛இல்லை.. இல்லை… என்னை நானே துப்பாக்கியால் ஒருபோதும் சுட்டு கொள்ளமாட்டேன். மாறாக ரஷ்யாவினரை திருப்பி சுடுவேன்” எனக்கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.