கழுகு மோதியதால் கண்ணாடி உடைந்தது.. டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!!
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் தேர்தல் பிரசாரத்திற்காக முலாபகிலு பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஹெலிகாப்டர் மீது திடீரென கழுகு மோதியது. இதனால் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஹெலிகாப்டரில் டி.கே.சிவக்குமாருடன் பயணித்த கேமராமேன் காயமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோருடன் டி.கே.சிவக்குமாரும் கலந்துகொண்டார். பின்னர் பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.