வங்கி முகாமையாளர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காவலாளி !!
வங்கி காவலாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் எரி காயங்களுக்குள்ளான வங்கி முகாமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரொஹர்க் மாவட்டம் தர்ஷலாவில் இந்திய வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியின் முகாமையாளராக முகமது ஓவைசி என்பவர் பணியாற்றி வருகிறார். அதே வங்கியில் காவலாளியக தீபக் கெஷெத்ரி பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை தீபக் வேலைக்கு வரவில்லை. இதனால், தீபக்கிற்கு முகாமையாளர் முகமது வருகை பதிவேட்டில் வருகை தரவில்லை என பதிவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தீபக் பெட்ரோல் கானுடன் வங்கிக்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த முகாமையாளர் முகமது மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். காவலாளி தீபக் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் முகாமையாளர் முகமது எரிகாயங்களுக்குள்ளானார்.
அவரை ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 36 சதவிகித தீக்காயங்களுடன் முகமது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீபக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.