தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம் ; இளைஞனின் மரணத்தால் அதிர்ச்சி
கல்பிட்டியில் நடந்த விபத்தில் எட்டலையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எட்டலை சந்தியில் பாலவியாவிலிருந்து கல்பிட்டிக்குச் சென்ற ஒரு கார் மோதியதில் இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர் கல்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
அதனையடுத்து காரின் சாரதி கைது செய்யப்பட்டார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.