நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 40ஆவது நினைவு தினம்: வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் அஞ்சலி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று பிற்பகல் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது.
இதன்போது வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் உள்ள அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், கேசவன் சயந்தன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ், யாழ்.வலிகாமம் தேன்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா யெசீதன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு